Wednesday 2 November 2016

பைனாப்பிள் இனிப்புக்காரப் பச்சடி.


வெகுநாட்களாக இந்தப்பச்சடியைச் செய்து பார்க்க எண்ணம்.  மும்பையில்  கலியாண சமையல்களில் பந்தியில்  இந்தப் பச்சடி கட்டாயம் இடம் பெறுகிறது.    ஸரி நாமும் செய்து பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் செய்தது இது.  கட்டா மீட்டா என்று ஹிந்தியில் சொல்வார்கள். அது ஞாபகம் வந்தது.   நீங்களும் செய்து பார்க்கலாமே!

வேண்டியவைகள்--- பைனாப்பிள் துண்டுகள் அதான் அனாசிப்பழத்துண்டுகள்-2கப்
தேங்காய்த் துருவல்   --அரைகப். சிறிது குறைவானாலும் பரவாயில்லை.
சீரகம்--அரைஸ்பூன்,

  வெல்லம் கால்கப் .
 . பச்சைமிளகாய் --சிறியதாக இரண்டு
.புளிப்பில்லாத  தயிர் அரைகப்.
  கடுகுசிறிது, எண்ணெய் தாளித்துக் கொட்ட சிறிது. உப்பு சிறிது   மஞ்சள்பொடி. துளி





செய்முறை.
தேங்காய்,மிளகாய்,சீரகத்தைத் துளி தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

  பழத்துண்டுகளைச் சிறிது  தண்ணீருடன், உப்பும்,மஞ்சள்ப் பொடியும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

பழம் வெந்ததும்  வெல்லப்பொடியைச் சேர்த்துக் கிளறிக் கொதிக்க வைக்கவும்.

அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து ஒரு கொதி விட்டுத் தயிரைச்சேர்த்து இறக்கி, கடுகைத் தாளித்துக் கொட்டவும்.
 பச்சடி தயார். மிளகாய்  காரத்திற்குத் தக்கபடி சேர்க்கவும்.
பழம் சிறிது குறைவானாலும்  பரவாயில்லை.  பச்சடி   சுவையாகத்தான் உள்ளது.





6 comments:

  1. அன்னாசிப் பழம் கிடைப்பதே அரிதாக உள்ளது! :( இதே போல் பறங்கிப் பழத்திலும் செய்கின்றனர்.

    ReplyDelete
  2. கிடைத்தால் கூட கடையிலேயே தோல்சீவிக் கொண்டுவரவேண்டும். மும்பையில்,சென்னையில் பழக்கடைகளில் கிடைக்கிறதே. ஒரு பழம் இங்கு வாங்கி வந்தார்கள். ரஸம்,சாட்,பச்சடி, அப்படியே என நான் உபயோகப் படுத்தினேன். பீட்ரூட்டில்கூட செய்யலாம். எல்லாம் சாப்பிடவும் ஆள் வேண்டும். கல்யாணம் கார்த்தியில் இலையில் ஒரு ஐட்டமாகிவிடுகிறது. வரவிற்கும், கருத்திற்கும் ஸந்தோஷம். அன்புடன்

    ReplyDelete
  3. அருமையான பச்சடி.
    செய்து பார்க்கிறேன் அக்கா.

    ReplyDelete
  4. மிகவும் நன்றி. செய்து பார்த்து ருசித்தால்தான் தெரியும். கலவையான ருசி. வரவிற்கு மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்

    ReplyDelete
  5. மாங்காய் பச்சடி செய்வது போல் அன்னாசிப்பழப் பச்சடி செய்ததுண்டு அம்மா. அது போல் இந்தத் தயிர் பச்சடி திருவனந்தபுரத்தில் இருந்த போது ஒரு மாமி இப்படியும் செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அங்கு கல்யாணங்களில் போடுகிறார்கள்.நன்றாகவே இருந்தது. அதன் பின் வீட்டிலும் செய்தேன். இப்படியே கேரளத்தார் மாங்காய் வெள்ளரிக்காய் போட்டுச் செய்து தாளிக்கும் போது வெந்தயமும் தாளித்து மோர்க்கூட்டான் என்றும் செய்கிறார்கள்.

    ReplyDelete
  6. நான் மும்பையில் ஒரு கல்யாணத்தில் சாப்பிட்டுவிட்டு, செய்முறை கேட்டுக்கொண்டு வந்தேன். ரஸம்கூட நன்ராக இருக்கிறது. கீதாவிற்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஸந்தோஷம். அன்புடன்

    ReplyDelete