Tuesday 29 November 2016

பஜ்ஜி மிளகாய்க் கறி.

காரமில்லாத  பஜ்ஜி மிளகாய்தான்   மேலேயுள்ள படம்.  காரமே இருக்காது. நீண்ட அளவில்  சற்றுப் பருமனான  இந்த மிளகாயினுள்  அதிக விதையும் இருப்பதில்லை.
மும்பையில்  சற்றுக் குட்டையாகக் கிடைக்கும். நம்ம ஊரில் கிடைக்கிறதா யோசனை செய்தேன் .  மிளகாய் பஜ்ஜியும் பிரபலமானது  நம் ஊரிலும். ஏதாவது காரம்  சற்றுக் கூடக் குறைய இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ரொட்டி,பரோட்டாவுடன் சாப்பிட இதைக் கறிபோல என் மருமகள் செய்கிறாள். நானும் ஒரு நாள் செய்து பார்த்தேன்.
ஸரி பிளாகிலும் போடலாம். பிடித்தவர்கள்,கிடைத்தவர்கள் செய்யலாமே?

வேண்டியவைகள்.   நான் கிட்டத்தட்ட  கால் கிலோ மிளகாயில் செய்தேன்.  காரமில்லாத  பஜ்ஜி மிளகாய்.  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
மிளகாய்ப்பொடி----ஒரு டீஸ்பூன்
மஞ்சள்பொடி---அரை டீஸ்பூன்
தனியாப் பொடி---இரண்டு டீஸ்பூன்.
நல்ல கடலைமாவு---இரண்டு டேபிள்ஸ்பூன்.
எண்ணெய்--மூன்று டேபிள்ஸ்பூன்.
கடுகு,பெருங்காயம்,சீரகம்  தாளித்துக் கொட்ட
ருசிக்கு ---உப்பு.
செய்யும் விதம்.
சுத்தம் செய்த    மிளகாயைக் காம்பு நீக்கி
திட்டமான துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
அடிகனமான வாணலியில்  எண்ணெய்விட்டு சூடாக்கி   கடுகு,பெருங்காயம் சீரகத்தை தாளிக்கவும்.
மிளகாய்த் துண்டங்களில்   சிறிதைப் போட்டுக் கிளறி  பொடிகளைப் போட்டுப் பிரட்டவும்.  ஓரளவு பொடிகள் வறுபடும்.  மீதி மிளகாய்த் துண்டங்களைச்  சேர்த்துக் கிளறி விடவும்.
ஓரளவு  மஸாலாவுடன் மிளகாய் லேசாக வதங்கும்.
கடலை மாவைப் பரவலாகத் தூவி   நல்ல முறையில்  பரவலாக மாவு எல்லாவற்றுடனும்   ஒட்டிக்கொள்ளும் வகையில்க்  கிளறி விடவும்.
தீயை மிதமாக்கி  சட்டுவத்தால்   மாவு சிவக்கும் படியாக   அடிக்கடி லேசாகக் விட்டு விட்டுக்    கிளறிக் கொடுக்கவும்.




பச்சை மாவு வாஸனை போன பின்  கால் கப் தண்ணீரைத் தெளித்து,வேண்டிய உப்பைச் சேர்த்துக் கிளறி   மூடி வைக்கவும்.
இரண்டு மூன்று நிமிஷத்தில் மாவின் ஈரப்பசை போகும்.   நன்றாக வதக்கவும்.
கையில் ஒட்டாத பதத்தில் இரக்கி  உபயோகிக்கவும்.



வேண்டுமானால் இரண்டொரு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
பஜ்ஜி மிளகாய்க் கறி ரெடி.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி எது வேண்டுமானைலும் வதக்கும் போது சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்பிரிங் ஆனியன்,பூண்டுத்தாள் இவைகளை,  இந்த முறையில் செய்யலாம்.  முடிந்தவர்கள்,பிடித்தவர்கள் செய்யலாமே?
தண்ணீர் தெளிக்கும் போது   சிறிது சிறிதாகத் தெளிக்கவும்.

11 comments:

  1. மிகவும் நன்றி. அன்புடன்

    ReplyDelete
  2. குடமிளகாயில் செய்தது உண்டு. ஆனால் கடுகு, உபருப்பு தாளித்து உப்புடன் தேங்காய், சர்க்கரை சேர்ப்பேன். காரம் சேர்த்துச் செய்ததில்லை.

    ReplyDelete
  3. வித்யாசமான செய்முறையா இருக்கும்மா...இந்த மிளகாயில் பஜ்ஜி செய்ததே இல்லை..மஞ்சள் நிறத்தில் இருக்கும் பஜ்ஜி மிளகாய்தான் இதுவரை உபயோகித்திருக்கேன். அடுத்த முறை கடைக்கு போகும்போது மறக்காம இந்த மிளகாயைத் தேடிப்பார்க்கிறேன். :)

    ReplyDelete
  4. குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தபா செஞ்சு பார்த்துடறேன்!

    ReplyDelete
  5. குடமிளகாயில் லேசாக காரம் இருக்கும். தேங்காய் சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும். அந்த மிளகாய்க்கு சென்னை வரும்போது செய்யணும். நார்த் இண்டியன் சமையல்களில் தேங்காயை நினைப்பதே இல்லை. அம்மாதிரி ஒன்று இது. இந்த மிளகாயிலேயே ஒரு நாள் செய்து விட்டால்ப் போகிறது. நன்றி. அன்புடன்

    ReplyDelete
  6. மஹி தேடிப்பாரு. நிறைய கிடைக்கும். பல விதங்களில் இது ஒரு விதம். யாவுமே யாவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. நன்றி அன்புடன்

    ReplyDelete
  7. பாருங்கள். மிளகாயில் காரம் சிறிது காரமிருந்தால் பொடியைக் குறைத்துப் போடலாம். நன்றி அன்புடன்

    ReplyDelete
  8. காமாட்சிம்மா இது நான் குடைமிளகாயில் செய்வதுண்டு. பொரியல் போன்றும், உசிலியாகவும், நீங்கள் சொல்லியிருப்பது போன்று கடலமாவு சேர்த்தும், வெங்காயாத்துடன் வதக்கியும் செய்வதுண்டு. பஜ்ஜி மிளகாய் காரமில்லாமல் கிடைக்க வேண்டும் கிடைத்தால் செய்து பார்த்துடறேன்...

    கீதா

    ReplyDelete
  9. வருகைக்கு மிகவும் நன்றி கீதா. தீடீரென்று செய்ய இந்த முறை உதவுகிறது. செய் நன்றாக வரும். பழக்கமிருக்கிறது உனக்கு.ஸந்தோஷம். அன்புடன்

    ReplyDelete

  10. நீங்கள் சொல்லி இருக்கும் குறிப்புபடி சமைத்த இந்த பாதார்த்தத்தை ஒரு பார்ர்டியின் போது சாப்பிட மைகவும் சுவையாக இருந்தது. நீங்கள் சொன்னபடி சமைச்சு பார்க்கனும்

    ReplyDelete