Saturday, 14 July 2018
திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!
திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)
Saturday, 14 April 2018
வாழ்த்துகள்.
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி
Tuesday, 27 March 2018
பன்னா என்னும் மாங்காய் ஜூஸ்
வெகு நாட்களுக்குப் பிறகு தாக சாந்திக்கேற்ற ஜூஸுடன் வருகிறேன். இதன் பெயர் பன்னா. மாங்காயில் செய்யப்படுவது.
நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
வட இந்தியாவில் மாங்காய் சீஸனில் கட்டாயம் இதைச் செய்கிரார்கள். செய்வதும் எளிது. ருசியும் இருக்கிறது. குடி பட்வா சிறப்புப் பானமும் இது.
புளிப்பு ருசி பிடிக்காதவர்கள் அதிக புளிப்பில்லாத மாங்காயில் செய்து ருசிக்கலாம்.
கிளிமூக்கு மாங்காய் போன்ற வகைகளிலும் செய்யலாம்.
என்னுடைய மருமகள் அடிக்கடி செய்வதால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நம் பக்கத்தில் ஐயோடி! இருக்கிற வெய்யில் போதாதா? மாங்காய் உஷ்ணமாச்சே. அதிலே ஜூஸ் வேறு செய்து சாப்பிட்டால் உடம்பிற்கு ஆகுமா என்பார்கள். பொதுவாக இம்மாதிரி வார்த்தைகள்தான் வரும். ஆனால் அப்படி இல்லை.
வெயில் நேரத்தில் ஜில் என்ற இந்த ஜூஸ் குளிர்ச்சியைத் தரும். தாக சாந்தியாகும். வெந்த மாங்காய். ஆதலால் நல்லதே!
மாங்காயில் எவ்வளவு வகை செய்கிறோம்? அப்படி இதுவும் ஒன்று.
வாருங்கள் நாமும் சற்று முற்றிய மாங்காயொன்றில் செய்வோம்.
வேண்டியவைகள்.
மாங்காய்---ஒன்று.
சர்க்கரை-- நான்கு டீஸ்பூன், ருசிக்குத் தக்க அதிகரிக்கவும்.
சின்ன துண்டு இஞ்சி
புதினா இலை--4
காலாநமக் என்னும் இந்துப்பு அரை டீஸ்பூன்.
ஏலக்காய்--1
சின்ன குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீருடன் முழு மாங்காயைச் சேர்த்து நான்கு விஸில் சத்தம் வரும்வரை வேக வைத்து இறக்கவும்.
இல்லை, பருப்பு வேகவைக்கும் போது வேறு ஒரு ஸப்ரேட்டரில் அதன் மேல் வைத்துவேக வைத்தாலும்ஸரி.
ஆறினவுடன் மாங்காயின் மேல்த் தோலை நீக்கவும்.
மாங் கதுப்புக்களை ஒரு ஸ்பூனினால் கொட்டையினின்றும் தனியாகப் பிரித்துக் கொட்டையை நீக்கி விடவும்.
வெந்த மாங்கதுப்புகளுடன்,புதினா,இஞ்சி,ஏலக்காய்,காலாநமக் சேர்த்து மிக்ஸியில் குளிர்ந்த நீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதில் இரண்டு கப் அளவு குளிர்ந்த நீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டியில் வடிக்கட்டவும்.
. சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ருசி பார்த்து வேண்டியவைகளை அதிகரித்து, கோப்பைகளில் நிறப்பி அழகு பார்த்துப் பருகவும். ருசியான பன்னா!
புளிப்புக்கேற்ப இனிப்பும்,தண்ணீரும் அதிகமாக்கலாம்.
ஸ்ரீராம நவமி நிவேதனத்தில் பன்னாவும் சேர்த்து விட்டேன். நாம் மட்டும் ருசிக்கலாமா?
Saturday, 13 January 2018
Sunday, 31 December 2017
வாழ்த்துகள்
அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் யாவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்புடன் காமாட்சி
Thursday, 7 December 2017
மூலிகை மிக்ஸ்
மூலிகையைத் தேடிக்கொண்டு போகவேண்டுமா. அப்படியெல்லாமில்லை. ஸுலபமாக நாம் உபயோகிக்கும் ஸாமான்கள்தான்.
பெயர் கொஞ்சம் மாறுதலாயிருந்தால் படிக்கத் தூண்டும். செய்யவும் தூண்டும். இது எந்தவகையோ தெரியாது. ஆனால் சாப்பிடத் தூண்டும்.பசியையும் தூண்டும். செய்வதும் ஸுலபம்தான். வேண்டியவைகளைப் பார்ப்போமா.
வீட்டிலிருந்தவைகளைக் கொண்டே செய்த ருசியான ஒரு பொடி.
பச்சைகறிவேப்பிலை--- இரண்டுகப்.சுத்தம் செய்து ஈரமில்லாமல் துணியில் பரத்தி வைக்கவும்.
முதல்நாள் வாங்கிய புதினாவைக் காயப் போட்டிருந்தேன் . அது அரை கப் இருக்கும்.
கடலைப்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் ---வகைக்கு அரை டீஸ்பூன்
வெள்ளை எள்---ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த குண்டு மிளகாய்----நான்கு
ஒரு நெல்லிக்காயளவு புளி
உப்பு,பெருங்காயம் தேவைக்கு.
செய்முறை
வாணலியை அடுப்பில் காயவைத்து எள்ளைப் போட்டு படபடவென்று பொரியும் படி சிவக்க வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில் பருப்புகளையும் தனித்தனியாக எண்ணெய் விடால் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.தீ நிதானமாக இருந்தால் தீயாமல் பருப்புகள் வறுபடும். மிளகு சீரகத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வறுத்தெடுக்கவும்.
மிளகாயைச் சொட்டு எண்ணெய் விட்டு வறுத்தால்தான் நல்லது.ஒரு அரை டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் காயவைத்து
கறிவேப்பிலையைப் லேசாக வறுத்து தீயை நிறுத்தி விடவும் அதிலேயே வைக்கவும்.
நமுத்துப்போகாமல் இருக்கும்.
யாவும் ஆறிய பின்னர் பருப்புகள்,மிளகு சீரகம்,மிளகாய்இவைகளை கரகர பதத்தில் மிக்ஸியில் பொடிக்கவும். வறுத்தபுளி, அல்லது புளிப் பொடியாக இருந்தால் அதையும், வறுத்த எள்,உப்புசேர்த்து ஒரு சுற்று சுற்றவும். வறுத்த கறிவேப்பிலை,காய்ந்த புதினா இவைகளையும் சேர்த்து பருப்புப்பொடி பதத்தில் அரைத்தெடுத்து பெருங்காயப்பொடி கலந்து ஒரு பாட்டிலில் பத்திரப் படுத்தவும். மிகவும் நைஸாக பொடிக்கக் கூடாது.
சாதத்தில் நெய் விட்டுக் கொண்டு இப்பொடியைச் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். பச்சடி,மோர்குழம்பு,வெந்தயக்குழம்பு இவைகள் ஜோடி சேரும். தாளித்துக்கொட்டிக் கலந்த சாதமாகவும் தயாரிக்கலாம்.
நான் நாரத்தை அல்லது எலுமிச்சை இலைகளையும் ஒன்றிரண்டு உடன் சேர்ப்பேன். வாஸனையாக இருக்கும் எதுவும் மற்றவர்களுக்கு விருப்பம் வேண்டுமே!
Monday, 16 October 2017
Subscribe to:
Posts (Atom)






