Saturday 28 November 2020

அண்ணாமலை தீபத்திருநாள்


அளவில்லாத அகல் விளக்குகளை ஏற்றி,  அண்ணாமலையாரை மனதில் நினைத்து, உலகமுழுவதையும்  கொரோனா என்ற அரக்கன் பிடியிலிருந்து  விடுவித்து,  பயமற்ற  வாழ்வைக் கொடுக்க வேண்டுவோம்.   அன்புடன் 

நாளை 29 நவம்பர்   அண்ணாமலை தீபம். வாழ்த்துகள் யாவருக்கும்.

Saturday 21 November 2020

திருவண்ணாமலை


 

மலையையே தெய்வமாக வணங்கும் உன்னத மலை இது

பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித்தலமாக விளங்குவது இது.

திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகக் கூறப் படுகிறது.

வினையை நீக்கும் உருவில் திருவண்ணாமலை உள்ளது.

திருவண்ணாமலை  கார்த்திகை தீபத்திற்கு நிகராக எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. 

திருக்கார்த்திகை தினத்தன்று மலையில் ஏற்றப்படும் தீபத்தை ஒரு முறை தரிசித்தாலே இருபத்தியோரு தலை முறைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்

.திருவண்ணாமலை ஈசனை மனதில் நினைத்தாலே,முக்தி கிடைக்கும் என்று  நம்பப்படுகிறது. 

அருணாசலேசுவரரையும்,அபீத குசாம்பாளையும் வணங்கி திருவண்ணாமலை தீபத்தை மனதாரக் கண்டு மகிழுவோம்.

கொரானோ காலமாதலால்  இருக்கும் இடத்திலேயே மனதால் நினைத்து மகிழ ஒரு சில விஷயங்களுடன் இந்தக் கட்டுரை. 

விஷயங்கள் யாவும் வாட்ஸ்அப்பில்  எனக்கு வந்தவைகளில் சிலதுதான் இவைகள். 

29--11---2020   ஞாயிற்றுக் கிழமையன்று கார்த்திகை தீபம்.


அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும்  அருள்புரிய வேண்டுவோம்.

அண்ணாமலைக்கு அரோஹரா என்பதே இவ்விடத்திய வேண்டுதல் கோஷம்.



Friday 13 November 2020

வாழ்த்துகள்


யாவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஆரோக்கியமான தீபாவளியாக இருக்கட்டும்   எப்படி இடுகை இடுவதென்பதே மாறி இருப்பதாகத்தோன்றுகிறது.   எதுவாக இருந்தாலும் ஸரி. முயற்சிப்போம்.

ஆசிகளையும் அன்பையும்தானே சொல்லப் போகிறோம். ஆதலால் உங்கள் யாவர் குடும்பத்தின் அனைவருக்கும் என் மனமார்ந்த 14---11--2020 தின தீபாவளி    ஆசிகளும் அன்பும்.     பதிவிற்கு வந்து உங்கள்யாவரையும் பார்த்தே வெகுகாலமாகிரது.  பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? நாளை குழந்தைகள் தினமும் சேர்ந்து வருகிறது.   

முன்னதாகவே  இனிய தீபாவளி வாழ்த்துகள்   அன்புடன் காமாட்சி