Saturday 21 November 2020

திருவண்ணாமலை


 

மலையையே தெய்வமாக வணங்கும் உன்னத மலை இது

பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித்தலமாக விளங்குவது இது.

திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகக் கூறப் படுகிறது.

வினையை நீக்கும் உருவில் திருவண்ணாமலை உள்ளது.

திருவண்ணாமலை  கார்த்திகை தீபத்திற்கு நிகராக எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. 

திருக்கார்த்திகை தினத்தன்று மலையில் ஏற்றப்படும் தீபத்தை ஒரு முறை தரிசித்தாலே இருபத்தியோரு தலை முறைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்

.திருவண்ணாமலை ஈசனை மனதில் நினைத்தாலே,முக்தி கிடைக்கும் என்று  நம்பப்படுகிறது. 

அருணாசலேசுவரரையும்,அபீத குசாம்பாளையும் வணங்கி திருவண்ணாமலை தீபத்தை மனதாரக் கண்டு மகிழுவோம்.

கொரானோ காலமாதலால்  இருக்கும் இடத்திலேயே மனதால் நினைத்து மகிழ ஒரு சில விஷயங்களுடன் இந்தக் கட்டுரை. 

விஷயங்கள் யாவும் வாட்ஸ்அப்பில்  எனக்கு வந்தவைகளில் சிலதுதான் இவைகள். 

29--11---2020   ஞாயிற்றுக் கிழமையன்று கார்த்திகை தீபம்.


அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும்  அருள்புரிய வேண்டுவோம்.

அண்ணாமலைக்கு அரோஹரா என்பதே இவ்விடத்திய வேண்டுதல் கோஷம்.



7 comments:

  1. //அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் அருள்புரிய வேண்டுவோம்.//

    அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் எல்லோருக்கும் உடல் நலமும் , மனபலமும் தர வேண்டுவோம். அதுதான் இப்போது வேண்டும் அம்மா.
    அருமையாக இருக்கிறது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா.. மிகவும் நன்றி. அன்புடன்

      Delete
  2. அருமையான பதிவு அம்மா. அண்ணாமலையானும் உண்ணாமுலை அம்மனும் அனைவரையும் காத்திடப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. நீங்களும் வாங்கள். உலகம் யாவையும், தாமுளவாக்கலும்
    நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
    அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
    மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
    தினமும் நீங்கள் பிரார்த்தித்து எழுதுகிறீர்கள். நானும் அதையே செய்கிறேன். நன்றி. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. அலகிலா விளையாட்டுடையான் அன்னவர்க்கே சரண் நாங்களே. அன்புடன்

      Delete
  4. வரவிருக்கும் தீப திருநாள் குறித்து அருமையான பதிவு. அருள்மிகு அருணாசலேஸ்வரர்,அபீத குசாம்பாம்பாள் தன் தீப ஒளியால் நோய் தொற்றை நீக்கி இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு செல்ல பிரார்த்திப்போம்! தீப திருநாள் வாழ்த்துகள்.என்றும் அன்புடன்🙏

    ReplyDelete
  5. நன்றி. பிரார்த்தனை ஒன்றே நோய் தீர்ககும் மருந்து. வாருங்கள் பிரார்த்தனைக்கு உலகமே நன்றி கூறும். வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். மறுமொழி விருப்பமானது. அன்புடன்

    ReplyDelete