Saturday 22 July 2017

காரஸார டொமேடோரைஸ்




காரஸாரமான டொமேடோரைஸ்.
நல்ல வண்ணம் நிறைந்த தக்காளிச் சாதம். காரமும் தான்.
நல்ல பழுத்த பெங்களூர் தக்காளி வகை நிரம்பவும் நல்லது.   கலந்த சாத வகைகளில் இதுவும் ஓரிடத்தைப் பிடித்து விட்டது.
சின்னவர்கள்,பெரியவர்கள் எல்லோரும் விரும்பி ருசிப்பது. நீங்களும் ருசியுங்கள்.
கலந்த சாதங்களுக்கெல்லாம், சற்று மெல்லிய நீண்டவகை அரிசிகள் மிகவும் நல்லது. நாம் எந்த வகை அரிசி உண்கிரோமோ அதில் தயாரிப்பதுதான் சுலபம்.
சற்றுப் பருமனான அரிசி வகைகளுக்கு துளி காரம்,உப்பு அதிகம் வேண்டுமாக இருக்கலாம்.
செய்து,செய்து இரண்டொரு முறை பழக்கப் பட்டால், நீங்களே பல பேருக்கு வகை சொல்லுவீர்கள்.
வேண்டியவைகள்
நன்றாகப் பழுத்த கலரான தக்காளி---4 பெரியது.
வெங்காயம்---பெரியசைஸ்---1
இஞ்சி---அரை அங்குலத் துண்டு
நல்லெண்ணெய்----2 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
கடுகு---அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு,வேர்க்கடலை வகைக்கு 2 டீஸ்பூன்கள்
மிளகாய்ப்பொடி----அரை டீஸ்பூன் ,பெருங்காயப் பொடி  சிறிது
டொமேடோ சாஸ் அல்லது கெச்சப்-----1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
வற்றல் மிளகாய்----1
அரிசி---11/2 கப் கறிவேப்பிலை  வேண்டிய அளவு.
செய்முறை.
அரிசியை உதிர் உதிரான சாதமாகச் செய்து, தாம்பாளத்தில்கொட்டி ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தக்காளிப்பழத்தை அதில் போட்டு  இறக்கி ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.
தண்ணீர் ஆறிய பிறகுதக்காளிப்பழத்தைவெளியிலெடுத்து  ஒவ்வொன்றாகத் தோலை உரிக்கவும்.
உரித்த தக்காளி,நறுக்கிய வெங்காயம், இஞ்சி இவைகளை மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,மிளகாய்,கடுகு,பெருங்காயம் தாளித்து,பருப்பு வகையையும் சேர்த்து சிவக்க வருக்கவும்
கரிவேப்பிலையை உருவிச் சேர்த்து  அரைத்த விழுதைக் கொட்டிக் கிளரவும். மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.
உப்பு,டொமேடோ சாஸ் சேர்த்து மிதமான தீயில் சுருளக் கிளரவும்.
எண்ணெய் பிரிந்து தொக்கு மாதிரி சேர்ந்து வரும் போது, சாதத்தையும்
சேர்த்துக் கிளறி சூடேறினதும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
ருசியான கலர்ஃபுல் டொமேடோரைஸ் தயார்.
உருளைசிப்ஸ்,அப்பளாம் பொரித்தது இவை எல்லாம்  இதனுடன் ருசியோ ருசிதான். வாழைக்காய் வறுவல்,நேந்திரங்காய் வருவல்,மிக்சர் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள்.
சாஸோ,கெச்சப்போ சேர்த்தால் கலர்,ருசி இரண்டும் கூடுதலாகக் கிடைக்கும்.
ஸ்கூலில் லன்ச் சாப்பிடும்போது பருப்புகளெல்லாம் வேண்டாம் என்று
பேத்தியின் விருப்பத்திற்கிணங்க  செய்தது இது. நீங்கள் பருப்புகளெல்லாம் போடுங்கள். முந்திரியும்  போடலாம்.

பார்ப்போமா அரிசிகூட பாஸுமதி இல்லை  இது. சீரகச்சம்பா போன்ற அரிசி .  மேலே உள்ளபடம்  மாதிரிக்குதான்.
















18 comments:

  1. இது மாதிரி என் மாமி செய்வார். ஆனால் அரிசியைச் சமைத்து சாதமாக உதிர்க்காமல் தக்காளிச் சாறிலேயே வேக வைப்பார். இது மாதிரி நானும் செய்வதுண்டு. தக்காளித் தொக்கில். அதில் வெங்காயம் சேர்த்தது இல்லை. மற்றபடி சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு தொக்கைக் கலந்து கொண்டு மேலே தாளிதம் சேர்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. அவரர்களுக்குப் பிடித்தமாதிரி செய்வது ஸகஜம்தானே! இளந்தலைமுறையினர் வெங்காய வாஸனையை மிகவும் விரும்புகின்றனர். வாஸனை கவருமே. சாதம் சுடச்சுடச்சாப்பிட ஒரு பிரட்டல் அவ்வளவுதான். ஒரேவிதம்தான் செய்ய வேண்டும் என்பதில்லையே. உங்கள்மாதிரியும் செய்வதுண்டு. வரவிற்கு மிக்க மகிழ்ச்சி. அன்புடன்

      Delete
  2. நானும் இப்படி செய்வேன். அருமையாக இருக்கிறது.
    இன்னொரு சமையல் குறிப்பில் சாம்பார் பொடி போட்டு வதக்கி செய் முறை சொன்னார்கள் அப்படியும் செய்வேன்.
    படம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் வரவேற்கிறேன். ஸாம்பார் பொடி சேர்த்தால் சற்று வெந்தயக் குழம்பு வாஸனை வந்து விடுமோ என்ற சங்கை எனக்கு. பலவித ருசிகள். நமக்கு எல்லாவிதங்களிலும் செய்து பார்க்க லைஸென்ஸ் இருக்கிறது. நன்றி அன்புடன்

      Delete
    2. காமாட்சி மேடம், இப்போதான் "சங்கை" என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்கிறேன். அர்த்தம் தெரியும். பேச்சு வழக்கில் எந்த இடத்தில் (மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில்) "சங்கை" வார்த்தை உபயோகிக்கிறார்கள்?

      ப்ரபந்தத் தனியனில் "சங்கை கெடுத்தாண்ட தவராசா"ன்னு வரும். ரொம்ப வருஷத்துக்கு முன்னால, ஏன் சங்கைப் போய் "கெடுத்து ஆண்ட" என்று வருகிறது என்று நினைத்தேன் (சங்கு சக்கரம், அந்தச் சங்கு) அப்புறம் பழங்காலத்துல இலக்கியத்துல "சந்தேகத்துக்கு சங்கை என்று உபயோகப்படுத்தியிருக்கிறார்களாக்கும் என்று நினைத்தேன்.

      Delete
    3. நெ.த. இங்கே பார்க்கவும். சங்கைக்குப் பொருள்

      http://agarathi.com/word/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

      Delete
    4. தென்னாற்காடு மாவட்டமாக இருந்த எங்கள் ஊர் வளவனூர். அங்கு அக்ரகாரம் இருந்தது. அங்கே இந்த வார்த்தைப் பிரோகம் இருந்தது. சந்தேகம் என்ற வார்த்தைக்கு இதை உபோகப் படுத்துகிறோம். அதைத்தவிர சில வாக்கியங்களில் வேறு விதமாகவும் அர்த்தம் வரும். உதாரணம்--சங்கை இல்லாது பேச வந்துவிட்டான். பயம் இல்லாது இவ்விடம். சங்கை அவளுக்குக் கிடையாது. இவ்விடம் வெட்கம். சமயத்துக்குத் தகுந்த மாதிரி இப்படி அர்த்தம் ஆகும். நேபாலியில் கூட சங்காஎன்ற பதம் வெட்கம் என்பதைக் குறிக்கும். ஹிந்தியில் கூட சந்தேகத்துக்கு இந்தப்பதம் சற்று வேறு ஒலியில் உபயோகமாகிறது. வழக்கமான என் பாஷைதான். சிலசமயம் தானாக வருகிறது. அவ்வளவுதான். மிக்க சாதாரணமானவள்தான் நான். கீதாஅவர்களுக்கும்,உங்களுக்கும் நன்றி. அன்புடன்

      Delete
    5. பிரயோகம் திருத்தி வாசிக்கவும். அன்புடன்

      Delete
  3. பார்க்கவே அழகா இருக்கு மா...அரைக்காமல் பருப்புகள் தாளிதத்துடன் செய்வதுண்டு.. கெச்சப் சேர்த்துப் பார்க்கிறேன். சிலர் குக்கரிலேயே வதக்கி அரிசியை சேர்ப்பார்கள்..சிலர் தேங்காய் சிறிதும் அரைத்து சேர்ப்பார்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிபெண்ணே. குக்கரிலேயே சேர்த்துச் செய்தால் புலவு மாதிரி அது ஒருவிதம். அதில் தேங்காயும் சேர்ப்பார்கள். எல்லா முறைகளும் தெரிந்து கொள்வது நல்லதுதானே. இது பகல் உணவாக கையில் எடுத்துப் போவதற்கு நன்றாக உள்ளது. செய்து பார்க்கிறேன் என்று எழுதியுள்ளாய். மிக்க ஸந்தோஷம். அன்புடன்

      Delete
  4. பார்க்கவே அழகா இருக்கு மா...அரைக்காமல் பருப்புகள் தாளிதத்துடன் செய்வதுண்டு.. கெச்சப் சேர்த்துப் பார்க்கிறேன். சிலர் குக்கரிலேயே வதக்கி அரிசியை சேர்ப்பார்கள்..சிலர் தேங்காய் சிறிதும் அரைத்து சேர்ப்பார்கள்..

    ReplyDelete
    Replies
    1. பருப்புகள் தாளித்துதான் செய்ய வேண்டும். அன்புடன்

      Delete
  5. பார்க்கவும் நல்லா இருக்கு. செய்முறையும் கஷ்டமில்லை. கெச்சப் சேர்க்கிறதுதான் புதிதா இருக்கு. மற்றபடி வெங்காயம், தக்காளியை நன்றாக அரைத்துவிடுவதால், சாதம் வாசனையா இருக்கும், தக்காளி, வெங்காயம் அகப்படாது.

    இதுக்கெல்லாம் பாஸ்மதி உபயோகப்படுத்தவேண்டாம். சாதாரண, விரைவிரையாக சாதம் வரும் அரிசியே போதும். பாஸ்மதி சாதத்தின் வாசனையும், கலந்த சாதத்திற்கு அவ்வளவு நன்றாக இருக்காது.

    குறிப்புக்கு நன்றி. விரைவில் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜெனிவாவில் பாகிஸ்தான் பாஸுமதி ஒன்று வாங்குகிறோம். மெல்லிய நீண்ட அரிசி. வாஸனை கிடையாது. உங்கள் எல்லா யோசனையையும் வரவேற்கிறேன். கெச்சப்பினால் கலர் அழகாக வருகிறதுபாருங்கள். ஒரு டீஸ்பூன்தான். சர்கரை சிலபேர் சேர்ப்பார்கள். இதில் கெச்சப்பில் துளி இனிப்பு,புளிப்பும் கொடுக்கிறது என்பது என் அனுமானம். கலர் அழகாக வருகிறது. ஒருமுறை செய்து பாருங்கள். பார்க்க நல்லா இருக்கு. உங்கள் அபிப்பிராங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      Delete
  6. தக்காளி சேர்க்கும்போது கெச்சப் வேற சேர்க்கணுமா? இது மாதிரி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர செய்து பார்த்ததில்லை. ஒருமுறை முயற்சிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேள்விப்பட்டதை நான் செய்து காட்டி இருக்கிறேன். இதைக்கூட எங்கள் பிளாகிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன். கெச்சப் சேர்க்கும் காரணம் வண்ணத்திற்காகத்தான். ஸாதாரணமாக கெச்சப் உபயோகப்படுத்தும் வீடுகளில் பிரமாதமான மெனக்கிடுதல் இல்லை. அவசியம் சேர்க்க வேண்டும் என்பதில்லையே தவிர உணவுகள் பிரஸன்டேஷன் அழகாக வருமே. விளம்பரத்திற்குப் போய் விட்டேனா. எல்லாம் தேவையாக இருக்கிரது. செய்து பாருங்கள். நன்றி. எங்கள் ப்ளாகிலும் காமாட்சியைச் சேர்த்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      Delete
  7. காமாட்சிம்மா கலர்ஃபுல்லா இருக்கு சாதம். எங்கள் கேரளத்தில் கலந்த சாதம் என்பதெல்லாம் செய்வதில்லை அவ்வளவாக. ஏனென்றால் பொதுவாக நாங்கள் ரெட் ரைஸ்/மட்டை அரிசிதானே செய்கிறோம் அதனால் வீட்டில் செய்யும் பழக்கமே இல்லை. தமிழ்நாட்டிற்கு வரும் போது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். மிக்க நன்றி அம்மா...

    கீதா: காமாட்சிம்மா நான் செய்வது அப்படியே பருப்பு எல்லாம் தாளித்து வெங்காயம் வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கி அப்படியே செய்வதூண்டு. இல்லை என்றால் இரண்டும் கொஞ்ச்கம் வதக்கி அரைத்து நீங்கள் செய்திருப்பது போல் செய்வதுண்டு. ஆனால் வெங்காயத்தை அப்படியே தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் செய்ததில்லை..அதாவது வதக்காமல்....ஆனால் கெச்சப் அல்லது ஸாஸ் சேர்த்துச் செய்தததுண்டு....

    இப்படியும் நீங்கள் செய்திருப்பது போல் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி அம்மா. பார்ப்பதற்கே அழகாக சுவையாக இருக்கிறது!!

    ReplyDelete
  8. உங்கள் இருவரின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. உடனே பதில் போடவில்லை. கடந்த இருபது நாட்களாக உடல்நலம் ஸரியில்லை. குறிப்புகள் அவரவர்கள் செய்முறையை எழுதுகிறோம். இப்படிதான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. என்னுடைய மருமகள்களே ஒவ்வொருவருக்கு வெவ்வேறு முறை இருக்கும். நீங்கள் செய்யும் மாதிரி செய்யுங்கள் என்பார்கள். கீதா உனக்கு நிறைய பழக்கமிருக்கிறது என்று நினைக்கிறேன். மிக்க நன்றி கீதா.
    துளஸீதரன் வீட்டில் செய்வதுதான் ருசி மிகுந்து இருக்கும். ஹோட்டலில் வாங்குவது கலர்தான் பளிச். ருசி இருக்கும் அவ்வளவுதான். இளம் வயது பசங்கள் காரஸாரமாக விரும்புவதை கண்டு ரஸித்து செய்த பழக்கம் உண்டு. எதற்கு நன்றி. படத்தைப் பார்த்ததற்கேவா. நன்றி நான்தான் சொல்ல வேண்டும். அன்புடன்

    ReplyDelete