Wednesday 12 September 2018

வினாயகர்கள் மும்பையில்

காலையில்  வாட்ஸப்பில், வினாயகர்கள்  படங்கள் மும்பையினின்றும்.  நீ ஏன் படங்களே கேட்கவில்லை? என்ற கேள்வியுடன்.
எங்கு இருந்தாலும் படங்கள் வந்து விடும். போடுவேன்.  ஸரி இம்முறையும் படங்களே வந்து கேள்வி எழுப்புகிறது.   இரண்டு ப்ளாக்.  ஆனந்த சதுர்த்தி
போட்டோவை    யாவருக்கும்  கொண்டு செல்லட்டும்.

வாக்குண்டாம்  நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம்  மேனி நுடங்காது, பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு  நான் தருவேன்  கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே  நீ எனக்குச்
சங்கத்தமிழ்  மூன்றும் தா.









யாவரும்  வினாயகரின் பாதம் பணிந்து  ஆசிகள் பெறுவோம்.

16 comments:

  1. அழகான கணபதிகள் .இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் காமாட்சியம்மா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஞ்சு. அன்புடன்

      Delete
  2. எல்லாப் பிள்ளையார்களும் அழகு.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அழகுப் பிள்ளையார்களின் அணிவகுப்புதான் மும்பையில். நன்றி. ஆசிகளும் அன்பும்

      Delete
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். கண்களையும், மனதையும் கவர்கின்றன. இன்று பிள்ளையார் சுழியுடன் தங்கள் பதிவுக்குள் வருகிறேன்.
    தங்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். நன்றி'மா..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ! மிக்க ஸந்தோஷம். மனதைக்கவரும் பிள்ளையார்கள். ஒரு பத்து நாட்களுக்கு இன்னும் ஏராளமான கண்ணைக் கவரும் பிள்ளயார்களின் அணிவகுப்பு மும்பையில். என்னுடைய பிள்ளை அனுப்புவதால், பிரசுரிக்க முடிந்தது. நன்றிகளும்,ஆசியும். அன்புடன்

      Delete
  4. அனைத்தும் அழகு...

    இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் . உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து அன்பும் , ஆசிகளும். அன்புடன்

      Delete
  5. விநாயகர் படங்கள் கொள்ளையழகு.

    அடுத்த முறை பிரசாதங்களுடன் கூடிய படங்களை வெளியிட்டுடுங்க. (பாகும், பருப்பும், பாலும் தெளி தேனுமாவது)

    ReplyDelete
    Replies
    1. படத்துடன் பாலும்,பழமும் தனியாகத்தானே வைக்க வேண்டி வரும். நிவேதனம் ஆகாதே. எல்லோரையும்,பார்த்து, ஆசீர்வதித்து , வேண்டியவைகளை சாப்பிட்டுவிட்டு,வருவதாகச் சொல்லிவிட்டுப் போனதாக என் மனதின் நினைப்புகள். எல்லாம் செய்து விட்டால் ஆச்சு. மனதில் தோன்றாமல் போய்விட்டது. நன்றி. ஆசிகளுடனும், அன்புடனும்

      Delete
  6. விநாயகர் அனைத்தும் அழகு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். படங்கள் திரும்பப்பார்க்கும்படியான அழகன். நன்றி. ஆசிகளும்,அன்புடனும்

      Delete
  7. அழகுக்கு அழகன் ஐங்கரனே...

    அன்பின் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ஸந்தேகமே கிடையாது. அழகுக்கு அழகன்தான் ஐயன் கணபதி. நன்றி. ஆசிகளும்,அன்புடனும்

      Delete
  8. பார்க்கப் பார்க்க அலுக்காத விநாயகர்கள். பிள்ளையாரின் அழகு யாரைத் தான் கவராது! தாமதமான பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  9. நன்றி. நான் உங்களுடயது எல்லாம் படிப்பதுடன்ஸரி. எதுவும் முடிவதில்லை. அன்புடன்

    ReplyDelete