Wednesday, 2 January 2019

ஆலு போஸ்தா


பெயரைப் பார்த்ததுமே  புரிந்திருக்கும்.   வங்காளத்தவர்களின்  தயாரிப்பு முறை இது.

 நவராத்திரிக்கு முன்பு  தில்லியிலிருக்கும்போது   நாட்டுப்பெண்ணின்  சிநேகிதி   இதைக் கொண்டு வந்திருந்தாள்.    நான் பாரக்பூரிலிருந்தபோது   எப்போதோ   சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. சுமார் அறுபது வருடங்கள் ஆகியிருக்கும். அந்த தயாரிப்பே   ஞாபகத்தில் இருந்ததில்லை.

ஸரி காமாட்சிக்காவது எழுதியனுப்பலாம் என்று குறிப்புகள்   கேட்டேன்.  படங்களும் அவள் கொடுத்ததுதான்.     என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை.   மிக்க சுலபமானமுறை.

பாருங்கள் பிடித்தால் செய்து பாருங்கள். வங்க மொழியில் கசகசாவின் பெயர் போஸ்தா.  ஆலு உருளைக்கிழங்கின் பெயர்.
பாஞ்ச் புரண் என்று சொல்லுவார்கள்.  அது அவர்களின்   சமையலில் முக்கிய  இடம் வகிக்கும்  பொருட்கள்.    கசகசாவும் ,   சேர்த்து  மிகவும் எளிய முறையில் தயார் செய்த    சின்ன உருளைக்கிழங்கின்   கலவைதானிது.   சாதத்துடன் சாப்பிடவே வங்காளத்தவர்களும் விரும்புவார்கள்.  ரொட்டி,பூரி,ஏன் தோசையுடனும் சாப்பிடலாமே! குட்டி உருளைக்கிழங்கில்   முன்பு  நான் சொல்லுகிறேனில் எழுதிய  ஆலுதாம் ஞாபகம் வந்தது.

ஸரி தயாரிக்கும் முறையை   பார்க்கலாமா?

வேண்டியவைகள்.
சின்ன உருளைக் கிழங்கு---கால்கிலோ. சற்று அதிகமாகவும் போடலாம்.
பெரிய வெங்காயம்----மூன்று.
மிளகாய் வற்றல்---மூன்று
கசகசா---மூன்று டேபிள் ஸ்பூன்
 ருசிக்கு---உப்பு
நிறத்திற்கு  ---மஞ்சப் பொடி சிறிது
 வதக்க,பொரிக்க   வேண்டிய அளவு   எண்ணெய்.

பாஞ்ச் புரண் எனப்படுவது  ஒன்றும் பிரமாதமான ஸாமானில்லை.
கடுகு,வெந்தயம், சீரகம்,பெருஞ்சீரகம், ஓமம் ஆக ஐந்து ஸாமான்களே.! வகைக்கு   அரைஸ்பூன்  தாளித்துக் கொட்டப் போதுமானது. இவற்றுடன் ஒரு பிரிஞ்ஜி இலை என்ற தேஜ் பத்தாவும் போட்டிருந்தனர்.

கசகசாவைச் சிறிது  தண்ணீரில் ஊரவைக்கவும்.    உருளைக்கிழங்கை நீங்கள் வழக்கமாக வேக வைக்கும் முறையில்   முக்கா ல்பங்கு வெந்த பதத்தில் தண்ணீரில் வேகவைத்து வடிக்கட்டி,  தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த கசகசாவை மிக்ஸியின் சின்ன கன்டெய்னரில் போட்டு திட்டமானதண்ணீருடன் அறைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடிப்பொடியாக  நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, வெந்த உருளைக்கிழங்கைப் பொரித்து எடுத்து வைக்கவும்.


எண்ணெய்  அதிகம்  வேண்டாதோர்   சிவக்க உருளையை வதக்கியும் சேர்க்கலாம்.


அடிகனமான   வாணலியில்    இரண்டு,மூன்று  டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, முதலில் பிரிஞ்சி இலையையும் அடுத்து கடுகை வெடிக்கவிட்டு  மிளகாய் மற்றும்   தாளிக்கக்  கொடுத்த ஸாமான்களைச் சேர்த்து மிதமான தீயில்  வறுத்து நறுக்கிய வெங்காயத்தையும்  சேர்த்து வதக்கவும்.

                                     வெங்காயம் வதங்கியதும்,  பொரித்து வைத்துள்ள  உருளைக் கிழங்குகள்,  உப்பு, மஞ்சப் பொடி  சேர்க்கவும்.
                 
                             
இங்கு போட்டிருக்கும் படத்தைவிட   உருளைக் கிழங்கு சிவக்க வேண்டும். இது வதங்கும் உருளைக்கிழங்குதான்.  எண்ணெய்  வேண்டிய அளவு விட்டு  வதக்கவும்.
     நன்றாகச் சிவக்க வதங்கிய பிறகு   அரைத்து வைத்துள்ள  கசகசாவைச் சிறிது தண்ணீர்  விட்டுக் கரைத்துச் சேர்த்துக்  கொதிக்க வைக்கவும்.

யாவும்கலந்து கொதித்த பிறகு இறக்கி வைத்து   எதனுடன் சாப்பிட இஷ்டமோ அப்படிச் சாப்பிடவும்.
                                      தாளிப்பும் முதலிலேயே ஆகி விடுகிறது.  வேறு எதுவும் போட அவசியமில்லையாம். இரவல் குறிப்பும் படங்களும்! ரஸிக்க முடிகிறதா
பாருங்கள்.
பின் குறிப்பு-------தாளித்துக் கொட்டுவதில்  ஓமத்தை நீக்கி விட்டு  கருஞ்சீரகத்தைச்  சேர்க்கவும்.   உடம்பிற்கு மிகவும் நல்லது கருஞ்சீரகம். உதவி கீதாரெங்கன்.

27 comments:

 1. பார்க்க அழகாக இருக்கிறது அம்மா. ஓமம் சேர்ப்பது ஒன்றுதான் பிடிக்கவில்லை! ஓமம் சேர்த்து ஒரு தரம், சேர்க்காமல் ஒரு தரம் செய்து பார்க்கலாம். எளிதாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பிடிக்காததைத் தவிர்த்து விடுவதுதான் நல்லது. செய்வது எளிது, நாமும் ஒரு குறிப்பு எழுதினதாக வேண்டும் என்ற மன உந்துதலின் வெளிப்பாடுதான் இந்தக் குறிப்பு. இம்மாதிரி இன்னும் சிலவும் இருக்கிறது.சொல்லுகிறேனிலும் ஏதாவது எழுத வேண்டும். நன்றி அன்புடன்

   Delete
 2. இவ்வளவு கசக்கஸ்வா சேர்ப்பார்கள்? நல்ல தூக்கம் வரும்! தேங்காய் அரைத்து விடுவதற்கு பதிலோ?

  ReplyDelete
  Replies
  1. இது பெங்காலிகளின் சமையல். அவர்கள் சமையலிலும்
   தேங்காய் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் ஒருவரா சாப்பிடப் போகிறோம்? கொஞ்சம்,கொஞ்சம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். கசகசாவைக் குறைத்துப் போடுங்கள். புதிய ருசி. பிடிக்கும்,பிடிக்காது. இரண்டும் கலந்ததுதான் வேறு வகைச் சமையல்கள். முயற்சிதான் இது. சிறிது செய்து பாருங்கள். சுலபதயாரிப்பு. இந்தக்காலப் பசங்கள் ருசிப்பார்கள் என்று தோன்றுகிறது. அன்புடன்

   Delete
 3. பாஞ்ச் புரண்//

  இது பெங்காலிகள் உணவில் முக்கிய இடம் வகிக்கும் ஒன்று...

  இதோ முழுசும் படிச்சுட்டு வரேன். ஆலு போஸ்தா செய்த நினைவு வருது....படிச்சுட்டு வரேன்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாவா கீதா. கீதாக்களுக்குத் தெரியாத ஒன்றை எங்கே தேடுவேன்? நன்றி. அன்புடன்

   Delete
 4. காமாட்சிம்மா ஓமமா சேர்க்கிறாங்க? பாஞ்ச்ஃபோரன்ல? அது நைஜெல்லா/காலோஞ்சி இல்லையோ..நான் அதுதான் சேர்த்து பௌடர் செய்து வைச்சுருக்கேன்..எனக்கு என் மகனின் நண்பர் அவர் மனைவி கல்கட்டாவில்தான் மேற்படிப்பு படிச்சாங்க. அப்ப அங்கருந்து தெரிந்து கொண்டேன்...

  இந்த ஐந்தும் சம அளவில் ..நீங்க சொன்னதேதான் ஆனால் ஓமத்துக்குப் பதிலா நைஜெல்லா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா ராத்திரி பூரா இதே யோசனை. சற்று முன் ஃபோன் செய்து விசாரித்தேன். இதைச்சொன்னவர்கள் அதையே சொல்கிரார்கள்.
   கலோஞ்சி என்றால் கருஞ்சீரகமா? இந்த விவரத்தையும் எழுதி விடுகிறேன். நல்லதாகப் போயிற்று. இந்த விஷயத்திற்கு மிக்க நன்றி. அன்புடன்

   Delete
  2. ஓபுடன்மம் என்றே சொல்கிரார்கள்.அன்புடன்

   Delete
  3. ஓமம் என்று. அவர்கள் வழக்கமாக இருக்கலாம். அன்புடன்

   Delete
 5. சூப்பர் அம்மா....நான் கசகசா ஜஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்தான் ஊற வைத்து அரைத்ததுண்டு அதோடு ஓரிரண்டு காஷ்யூவும் சேர்த்து அரைத்து விட்டு விடுவேன்..

  சூப்பர் ரெசிப்பி காமாட்சிமம...இந்த வாரம் செய்துவிடனும்...நான் பொரிப்பது அபூர்வம். எண்னெய் வேண்டாம் என்று பேக்கிங்க் அவனில் வைத்து சிவக்க ரோஸ்ட் செய்து எடுத்துவிடுவதுண்டு...

  வதக்கி செய்து பார்த்துடுறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நானும் சொல்ல மறந்துட்டேன். பொரிப்பது வேலைக்காகாது. வதக்குவது நல்லாருக்கும். உடம்புக்கு பெட்டர்

   Delete
  2. வதக்கின படம்தான் போட்டிருப்பது. நன்றி அன்புடன்

   Delete
 6. புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி. எல்லோருக்கும் மங்களமுண்டாகட்டும். அன்புடன்

   Delete
 7. காமாட்சி அம்மா.. புத்தாண்டுல நல்ல ஒரு சமையல் குறிப்பு. கிட்டத்தட்ட சின்ன உருளை குருமா போல்இருக்கு. சப்பாத்திக்கு நல்லா இருக்கும். (நான், புல்காவுக்கும்)

  ஓம்ம் போட்டால் மருந்து வாசனை வந்துடாதோ?

  என்னென்னவோ ஊர் பேர்கள் சொல்றீங்க... வாழ்க்கைல இதுவரை கேள்விப்படாதவை

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ஸந்தோஷப் படுவீர்களென்று தெரியும். ஓமத்தை நீக்கி விடுங்கள். என்னென்னவோ ஊர்களின் உறவுகளும், அவர்களின் நண்பிகளும் எனக்கு. என்னைக் கேள்விப்பட்டது போல இதுவும். இன்னும் சிலதெல்லாம் இருக்கு. நானே செய்து எழுத முடியலே. நீங்கள் எல்லாம் சோதனைக்கூடமாக ஆகி விடுகிறீர்கள். உஷார். அன்புடன்

   Delete
 8. சின்ன உருளை குருமா செய்து இருக்கிறேன்.
  உங்கள் செய்முறை போல் செய்தது இல்லை, செய்து பார்க்கிறேன்.
  படங்கள் இரவலாக இருந்தாலும் செய்முறை விளக்கம் அழகாய் நீங்கள் சொல்வது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பெருந்தன்மையான பதில். படங்கள், முறை எல்லாமே இரவல். என்னுடைய வகையில் எழுத்துகள். மிக்கநன்றி. அன்புடன்

   Delete
 9. புதுப் புது ரெசிபி காமாட்சிமா..
  இனிய புத்தாண்டு நலவாழ்த்துகள். கசகசா இங்கே கிடைக்காது.
  இருந்தாலும் தேங்காய் ,முந்திரி அரைத்து விடுவது அருமையாக இருக்கும். மிக நன்றி மா.

  ReplyDelete
 10. கசகசா அங்கெல்லாம் எடுத்துப் போகக் கூட தடை. இதே மாதிரி திருவமாறி தேங்காய் முந்திரி அரைத்து விட்டுப் பாருங்கள். கசகசா இல்லாவிட்டால் என்ன? அன்பான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

  ReplyDelete
 11. செய்து பார்க்கிறோம்... நன்றி அம்மா...

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள். நன்றி. அன்புடன்

   Delete
 12. பாஞ்ச் ஃபோரனில் ஓமம் இல்லை அம்மா. ஒருவேளை உங்க சிநேகிதர் வீட்டில் சேர்ப்பாங்களோ என்னமோ! நானும் கருஞ்சீரகம் தான் சேர்க்கிறேன். சில சமயம் வறுத்துப் பொடியாகவும் வைத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் வங்காள சமையல் அவ்வளவாய்ச் செய்ததில்லை. :)))) அதிகம் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் சமையல் தான்!

  ReplyDelete
  Replies
  1. நானும் திரும்ப கருஞ்சீரகம் எழுதியிருக்கிறேன். குறிப்பு சொன்னவர்கள் அவர்கள் ஓமம் சேர்ப்போம் என்று திரும்பவும் சொன்னார்கள்.அதனாலென்ன? பொடித்த பொடியை இன்னும் ஸுலபமாக உபயோகிக்க முடியும். நன்றி வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும். அன்புடன்

   Delete
 13. வித்யாசமான ரெஸிப்பி. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தேனம்மை. நன்றாகவும் வரும். செய்து பாருங்கள். நன்றி. அன்புடன்

   Delete